Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Showing posts with label திரை விமர்சனம். Show all posts

Friday, May 15, 2015

36 வயதினிலே – சினிமா விமர்சனம் - ஜோதிகா பழைய ஜோதிகாவாக மாறினாரா?

ஜோதிகா அரசு பணியில் வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் ரகுமான் எப்.எம். வானொலியில் முக்கிய பொறுப்பில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகளான அமிர்தா பள்ளியில் படித்து வருகிறாள்.

ஜோதிகா 36 வயது நிரம்பியும் அப்பாவியாகவும், ரொம்பவும் வெகுளித்தனமாகவும் இருக்கிறார். இது அவரது கணவரான ரகுமானுக்கு பிடிப்பதில்லை. அவளுக்கு ஒன்றும் தெரியாது என்று ஜோதிகா மீது எந்த மதிப்பும் இல்லாமல் இருந்து வருகிறார்.

இதற்கிடையில் தான் பார்க்கும் வேலை பிடிக்காததால் அயர்லாந்து சென்று அங்கு வேலை பார்க்க எண்ணுகிறார். குடும்பத்துடன் அயர்லாந்து செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்கிறார்.

இந்நிலையில் ஒருநாள் ஜோதிகாவின் மகள் படிக்கும் பள்ளிக்கு குடியரசுத்தலைவர் வருகை தருகிறார். அப்போது அவரிடம் தன்னுடைய அம்மா, தங்களிடம் ஒரு கேள்வி கேட்கச் சொன்னார் என்று ஒரு கேள்வி கேட்கிறாள் அமிர்தா.

அந்த கேள்வியை கேட்டு வியக்கும் குடியரசு தலைவர், அவளிடம் உன் அம்மாவை என்னை வந்து பார்க்கச் சொல். அவரிடம் இதற்கு விடை கூறுகிறேன் என்று சொல்லி அனுப்புகிறார்.

உடனே ஜோதிகாவை சந்திக்க குடியரசுத்தலைவர் விருப்பப்படுகிறார் என்ற செய்தி நாடு முழுவதும் பரவிவிடுகிறது. ஜோதிகாவுக்கு இதில் கர்வம் இருந்தாலும் கொஞ்சம் பயமும் இருக்கிறது. அவ்வாறு பயம் கலந்த பீதியுடன் தன்னை சந்திக்கும் ஜோதிகாவை குடியரசுத்தலைவர் நலம் விசாரித்ததுமே, ஜோதிகா மயங்கி கீழே விழுந்து விடுகிறார்.

இது அங்குள்ள அனைவருக்கும் சிரிப்பலையை உண்டாக்குகிறது. இச்சம்பவம் நாடு முழுவதும் பரவிவிடுகிறது. சமூக வலைத்தளங்களில் ஜோதிகாவை கேலி செய்து, நிறைய கருத்துக்களை வெளியிடுகின்றனர். இதனால் ஏற்கனவே ஜோதிகா மீது மதிப்பு இல்லாமல் இருந்து வரும் கணவர் ரகுமானுக்கும், பள்ளியில் கிண்டலுக்கு உள்ளாவதால் மகள் அமிர்தாவுக்கும் ஜோதிகா மீது மேலும் வெறுப்பை ஏற்படுத்துகிறது.

பள்ளியில் தொடர்ந்து நண்பர்கள் கிண்டலடிப்பதால் பள்ளிக்கு செல்ல மறுக்கிறாள் அமிர்தா. இதற்குள் அயர்லாந்து வேலைக்காக விண்ணப்பம் செய்திருந்த ரகுமானுக்கு அங்கு செல்ல விசா கிடைத்துவிடுகிறது. கூடவே அரவது மகளுக்கும் விசா கிடைத்துவிடுகிறது.

ஆனால் ஜோதிகாவுக்கு மட்டும் விசா கிடைக்கவில்லை. ஜோதிகாவுக்கு 36 வயது ஆகிவிட்டபடியால் 36 வயது நிரம்பிய பெண் அயல்நாட்டில் வேலைக்கு செல்ல முடியாது என்ற விதிமுறையின் படி இவருக்கு மட்டும் விசா ரத்தாகிவிடுகிறது.

எனவே ஜோதிகாவை மட்டும் தனியாக விட்டுவிட்டு ரகுமானும், அவரது மகளும் வெளிநாட்டுக்கு சென்று விடுகிறார்கள். இந்த நிலையில்தான் ஜோதிகாவின் கல்லூரி தோழியான அபிராமி ஜோதிகாவை சந்திக்கிறார். அவளது நிலைமையைக் கண்டு வருத்தமடைகிறாள்.

ஆனால் உண்மையில் ஜோதிகா கல்லூரி பருவத்தில் புரட்சிகரமான, துடிதுடிப்பான பெண்ணாகவும், மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் பெண்ணாகவும் இருந்திருக்கிறார். ஆனால் கல்யாணத்திற்குப் பிறகு கணவன், குழந்தை என ஆனபிறகு அதையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு அடக்க ஒடுக்கமாக மாறிவிட்டாள். ஆனால் அது அவளை எந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது என்பதை அபிராமி அவளுக்கு புரிய வைக்கிறார்.

மேலும், அவளுடைய தூண்டுதலான வார்த்தைகளால்தான் தான் பெரிய நிலையில் இருப்பதையும் அபிராமி, ஜோதிகாவிடம் எடுத்துக் கூறுகிறார். மீண்டும் பழைய ஜோதிகாவாக மாற வேண்டும் என்று அவளை வற்புறுத்துகிறார்.

இறுதியில் ஜோதிகா பழைய ஜோதிகாவாக மாறினாரா? பிரிந்துபோன இவரது குடும்பம் இவருடன் மீண்டும் சேர்ந்ததா? குடியரசுத்தலைவரிடம் இவர் கேட்ட கேள்வி என்ன? என்பதே மீதிக்கதை.

36 வயது நிரம்பிய பெண்ணாக ஜோதிகா பளிச்சிடுகிறார். தலையில் சிறிது நரைத்த முடியை வைத்து இவரை மற்றவர்கள் கிண்டலடிக்கும் காட்சிகளில் அழகான முகபாவணைகளை கொடுத்திருக்கிறார்.

மேலும், தான் குடியரசுத்தலைவரை சந்திக்கப் போவதை மற்றவர்களிடம் சொல்லி பந்தா செய்யும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 8 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வந்தாலும், அதே பளபளப்பு, துள்ளலான நடிப்பு, வித்தியாசமான முகபாவணைகள் என எதையும் மறந்துவிடாமல் அதே இளமையுடன் நடித்து அனைவரையும் ஈர்த்திருக்கிறார்.

படம் முழுக்க ஜோதிகாவுக்குத்தான் நடிக்க வாய்ப்பு அதிகம் என்றாலும், அவ்வப்போது சிறுசிறு காட்சிகளில் வந்துபோகும் ரகுமான், நாசர், அபிராமி, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, டெல்லி கணேஷ் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை செவ்வனே கொடுத்திருக்கிறார்கள். ஜோதிகாவின் மகளாக நடித்திருக்கும் அமிர்தாவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

மலையாளத்தில் வெற்றி பெற்ற படம் என்றாலும், தமிழுக்கு ஏற்றார்போல் அழகான திரைக்கதை அமைத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ரோஜன் ஆண்ட்ரூவ்ஸ். ஆனால், படம் மெதுவாக செல்வதுதான் படத்திற்கு சற்று தொய்வைத் தருகிறதே தவிர, காட்சிகள் ஒவ்வொன்றையும் ரசிக்கும்படியாகவே செய்திருக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையில் ‘வாடி ராசாத்தி’ பாடல் அசத்தல். பின்னணி இசையிலும் கோலோச்சியிருக்கிறார். படத்திற்கு மற்றொரு பெரிய பலம் திவாகரனின் ஒளிப்பதிவு. இவரது கேமரா கண்கள், ஒவ்வொரு காட்சியையும் நம்மை படத்தோடு ஒன்றும்படி செய்திருப்பது சிறப்பு.

மொத்தத்தில் ‘36 வயதினிலே’ பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

36 வயதினிலே திரை விமர்சனம்

சூர்யாவின் 2டி எண்டெர்டெய்ன்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஜோதிகா, ரஹ்மான், தேவதர்ஷினி ஆகியோர் நடிப்பில் ரேஷன் ஆண்ட்ரூஸ் நடிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியிருக்கும் படம் 36 வயதினிலே. இது மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் தமிழ் பதிப்பாகும்.

36 வயதான ஜோதிகா அரசு அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரது கணவரான ரஹ்மானுக்கு நீண்ட போராட்டத்துக்கு பின் அயர்லாந்தில் வேலை கிடைக்கிறது. அவரது கணவர் மற்றும் மகளுடன் அயர்லாந்து செல்ல அவரும் வேலைக்கு முயற்ச்சி செய்ய வயதை காரணம் காட்டி அவரை நிராகரிக்க, அவரது மகள் இதனால் ஏமாற்றமடைகிறாள். இதற்கிடையே அவருக்கும் அவர் கணவருக்கும் ஏற்படும் சின்ன சின்ன சண்டையில் அவர் வயதை காரணம் காட்டி அவமானப்படுத்த படுகிறார். ஒரு கட்டத்தில் ஜோதிகாவை விட்டு கணவரும் மகளும் அயர்லாந்துக்கு பிரிந்து போக, தனிமையில் தான் கல்லூரி காலத்தில் எப்படி இருந்தோம், ஆனால் இப்போது ஏன் இப்படியிருக்கிறோம் என அவர் என்ன, அவர் வாழ்வில் ஏற்படும் மாற்றமே மீதி கதை.

இந்திய பெண்கள் திருமணத்திற்க்கு பின் எப்படி தனது அடையாளங்களை இழந்து, தனது வாழ்நாள் அனைத்தையும் தனது குடும்பத்திற்க்கு அர்பணித்து, தனது கணவர் மற்றும் குழந்தைகளால் ஆதிக்கம் செலுத்த படுகிறாள் என்பதை அச்சு அசலாக படம் பிடித்து காட்டியதற்க்கு கதாசரியர் மற்றும் இயக்குனருக்கு பாராட்டுக்கள். விஜி வசனம் ஒவ்வொன்றும் எதார்தம் கலந்த நகைச்சுவையுடன் நச்சென இருக்கிறது. சந்தோஷ நாராயணன் இசையில் பாடல்கள் நன்றாக உள்ளன. பின்னனி இசையிலும் தனது முத்திரையை பதித்திருக்கிறார்.

கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பின் வெள்ளி திரையில் ஜோதிகா, தனது எதார்த்த நடிப்பின் மூலம் தான் என்றும் சிறந்த நடிகை என நிரூபிக்கிறார். அவரது உடல்மொழியாகட்டும், முகபாவங்களாகட்டும் ஜோதிகாவை தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக இதை செய்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. ரஹ்மான், தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், டெல்லி கணேஷ் என ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்கள் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

மொத்ததில் 36 வயதினிலேவை மீண்டும் நடிக்க வர தேர்ந்தெடுத்த ஜோதிகாவிற்க்கு மிகச்சரியாக அமைந்துள்ளது.

36 வயதினிலே – வாடி ராசாத்தி

Tuesday, May 12, 2015

‘நீயும் நானும் நிலவும் வானும்’ காதல் கவிதை - திரை விமர்சனம்

நாயகன் தனிஷ், நாயகி மடால்சாவை பார்த்தவுடன் காதலிக்கிறார். உடனே தன் காதலை மடால்சாவிடம் சொல்கிறார். ஆனால் மடால்சா, தனிஷின் காதலை ஏற்க மறுக்கிறார். இருந்தாலும் மடால்சாவை விடாமல் துரத்தி துரத்தி காதலிக்கிறார் தனிஷ். ஒரு கட்டத்தில் தனிஷின் காதலை மடால்சா ஏற்றுக் கொள்கிறார்.

இருவரும் காதலித்து வருகின்றனர். ஒரு சமயத்தில் தனிஷின் பர்சில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை பார்க்கிறார் மடால்சா. பின்னர் தனிஷ் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்திருப்பதை தெரிந்துக் கொள்கிறார். தன் காதலன் தனிஷ் தன்னிடம் இந்த விஷயத்தை மறைத்ததால் அவன் மீது கோபப்பட்டு காதலை வெறுக்கிறார்.

இறுதியில் மடால்சாவை தனிஷ் சமாதானம் செய்தாரா? தனிஷின் முன்னாள் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் தனிஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். காதல், சென்டிமென்ட், நடனம், ஆக்‌ஷன் என அனைத்திலும் தன் திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக பிளாஷ்பேக்கில் வரும் நித்தியிடம் காதல் செய்யும் காட்சிகளும், அவருடைய காதலுக்காக ஏங்கும் காட்சிகளையும் சிறப்பாக செய்திருக்கிறார்.

படத்தில் நாயகி மடால்சா சிறிதளவே வருகிறார். அவருக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். பிளாஷ்பேக்கில் வரும் நாயகி நித்திக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நித்தியும் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். காதல் முக்கியமா, குடும்பம் முக்கியமா என்று நடிப்பில் வேறுபாடு காண்பித்திருக்கிறார். தனிஷ்-நித்தி நடனக்காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது.

காதல் கதையை மையமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் திரிநாத ராவ் அதில் சுவாரஸ்யம் சேர்க்காமல் விட்டிருக்கிறார். பிளாஷ்பேக்கிலேயே அதிக காட்சிகளை நகர்த்திருக்கிறார். எல்லாருக்கும் முதல் காதல் என்று ஒன்று இருக்கும் என்றும், காதலில் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்கள் தான் என்ற கருத்தை ஆணித்தனமாக சொல்லியிருக்கிறார். காதல் காட்சிகள் ஏற்கனவே பழைய தமிழ் படங்களை ஞாபகப்படுத்தியிருக்கிறது. கொஞ்சம் சுவாரஸ்யம், கொஞ்சம் விறுவிறுப்போடு காட்சிகளை அமைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

சேகர் சந்திராவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாக செய்திருக்கிறார். சாய் ஸ்ரீராமின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

மொத்தத்தில் ‘நீயும் நானும் நிலவும் வானும்’ காதல் கவிதை.

Saturday, May 9, 2015

‘இந்தியா பாகிஸ்தான்’ சீரியஸ் இல்ல… சிரிப்பு………திரை விமர்சனம்

நூத்து சொச்சம் படங்கள்ல பார்த்த ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கு இடையே வர்ற ஈகோ க்ளாஸ் தான் படத்தோட மெயின் விஷயமே..? ஆனா அதையும் கூட இன்னும் புதுசா காமெடி, ரொமான்ஸ் கலந்து லாஜிக்கே பார்க்காதீங்கன்னு கிளைமாக்ஸ் வரை விறுவிறுப்பா கொண்டு போறார் இயக்குனர் ஆனந்.

வழக்கறிஞரான விஜய் ஆண்டனி சென்னைக்கு வந்து வக்கீல் வேலைக்காக வீட்டோட சேர்ந்தாப்ல ஒரு ஆபீஸ் தேடுறார். ஆபீஸை பார்க்கிறதுக்கு முன்னாடியே ஹீரோயின் சுஷ்மாவை லேண்ட்மார்க் புக் ஷாப்ல பார்க்கும் விஜய் ஆண்டனி அந்த நொடி மனசை பறி கொடுத்துடுறார்.

விஜய் ஆண்டனியைப் போலவே ஹீரோயின் சுஷ்மாவும் ஒரு வக்கீல். அவரும் ஒரு புரோக்கர் மூலமா ஆபீஸ் தேடுறார். கடைசியில ரெண்டு பேருக்கும் ரெண்டு புரோக்கர்கள் ஒரே வீட்டை காட்ட கொஞ்சம் பெரிய வீடான அந்த வீட்டுக்கு வாடகையும் அதிகமாக இருக்க, இருவருமே வாடகையை ஷேர் பண்ணிக்கலாம்னு முடிவெடுத்து வீட்டுக்கு குடி வர்றாங்க.

ஆனா ரெண்டு பேருக்குமே தாங்கள் ரெண்டு பேருமே வக்கீல்ங்கிற உண்மை குடிவந்த பின்னாடி தான் தெரியுது. ஒரே தொழில்ல இருக்கிற ரெண்டு பேருமே கேஷ் புடிக்கிறதுக்காக அடிச்சிக்க ஆரம்பிச்சு இடத்துல ஈகோ க்ளாஸ் ஸ்டார்ட் ஆகுது. அதுல ஆரம்பிக்கிற ‘இந்தியா பாகிஸ்தான்’ சண்டை மாதிரி முடியாமல் கிளைமாக்ஸ் வரை எப்படி சுவாரஷ்யமா போகுதுங்கிறது தான் மொத்தப்படமும்!

ஒவ்வொரு கதையையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் ஆண்டனி இப்படத்திலும் அந்த வெற்றி பார்முலாவை பின்பற்றியிருக்கிறார் என்பதே உண்மை.

‘நான்’, ‘சலீம்’ படங்களில் ஆக்டிங் திறமையை நிரூபித்த விஜய் ஆண்டனி இதில் காமெடியையும் ஒரு கை பார்த்திருக்கிறார். அதில் ஜெயித்தும் விட்டார். அதோடு டான்ஸ், சண்டைக்காட்சிகள் என ஒரு முன்னணி ஹீரோவுக்கான எல்லா மெனக்கிடல்களையும் கேரக்டரில் மெருகேற்றியிருப்பது புத்திசாலித்தனம்.

ஹீரோயின் சுஷ்மா எத்தனை தடவை கேலி செய்தாலும் ஒரு ஹீரோவுக்கான லெவலில் இல்லாமல் கேரக்டருக்காக அதையெல்லாம் ஏற்றுக்கொண்டு நடித்திருக்கிறாரோ அதுவே நடிப்பின் மீதான அவருடைய காதலுக்கு சான்று தான்.

மெல்லினாவாக வரும் ஹீரோயின் சுஷ்மா ராஜ் கோலிவுட்டுக்கு கிடைத்த ‘சின்ன வயசு’ அனுஷ்கா. உயரத்திலும், அங்க அழகில் மட்டுமல்ல நடிப்பிலும் கூட அப்படியே அனுஷ்காவின் ஜெராக்ஸ் தான். கண்டிப்பா ஒரு ரவுண்ட்டு வருவார்.

பல படங்களில் வில்லனாகவே பார்த்து விட்ட பசுபதிக்கு கூட இப்படத்தில் காமெடி கேரக்டர் தான். எங்க ஊர்லயே எங்க அய்யா தான் ரொம்ப படிச்சிருக்காரு… 3 வகுப்பு வரைக்கும்…
என்று பசுபதிக்கு அறிமுகம் கொடுக்கும் போது சிரிக்காமல் இருக்க முடியுமா என்ன?

அதேபோல அவருடைய எதிரியான எம்.எஸ்.பாஸ்கர் எதற்கெடுத்தாலும் கண்ணை மூடி கைகளை தூக்கி ஆத்தாவை கும்பிட்டு உத்தரவு வாங்குவதும், அதற்கு பக்கத்தில் இருந்தே மணி ஆட்டும் மனோபாலாவும் கலக்கலான காமெடி காம்பினேஷன்.

இவர்களோடு வீட்டு புரோக்கராக ஜெகன், மனோபாலா, யோகிபாபு, காளி,முனீஸ்ராஜா, டி.பி.கஜேந்திரன் என ஒரு காமெடி கூட்டணியை வைத்து இடைவேளைக்குப் பிறகு கிராமத்து பேக் ட்ராப்பில் கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள்.

குறிப்பாக யோகி பாபு செய்யும் காமெடிகள் எல்லாமே டைமிங் காமெடி தான். ”எங்க அய்யாவோட பேரு ‘காட்ட முத்து’ அவருக்கு இன்னொரு பேரும் இருக்கு… என்று இடைவெளி விட்டு அதுவும் ‘காட்ட முத்து’ தான்னு சொல்வார் பாருங்க… சான்ஸே இல்ல…

போன் ஸ்க்ரீனில் வானிலை ரிப்போர்ட்டை பார்த்து இப்போ மழை வரும் என்று சொல்லும் ஹீரோயினை அடடே இந்த பொண்ணு சொல்றதெல்லாம் அப்படியே நடக்குது. அப்போ இவகிட்ட ஏதோ சக்தி இருக்கு என்று நம்பும் வெள்ளந்தி கிராமத்து மக்களின் இயல்பையும் காட்டி சிரிக்க வைக்கிறார்கள். இப்படி படம் முழுக்க சிரித்து சிரித்து களைத்துப் போக காமெடிக்காட்சிகள் வரிசை கட்டி நிற்கின்றன.

நகரம், கிராமம் என இரண்டு ஏரியாக்களையும் சரிசமமாக கதையை நகர்த்தி கொண்டு போகிறார் இயக்குனர் ஆனந்.

‘காதலுக்கு மரியாதை’ படத்தின் ஒரிஜினல் டிவிடி படத்தின் ஆரம்பத்தில் இருந்து கிளைமாக்ஸ் வரை வருகிறது. அதை வைத்து கிளைமாக்ஸில் காபி காபி என்று காளி வெங்கட் செய்யும் காமெடி கிளைமாக்ஸ் கலகல….

இப்படி படம் முழுக்க லாஜிக்கே பார்க்காமல் சிரித்து ரசிக்க ஏக்கப்பட்ட சீன்கள் உண்டு.

பொதுவாக சுந்தர்.சி. படங்கள் தான் இந்த டைப்பில் இருக்கும். இப்படத்தின் இயக்குனர் ஆனந்தும் அந்த வகை காமெடி டைப்பாகத்தான் இருக்கிறார். போதாக்குறைக்கு நாம ரொம்ப சாதாரண பேசுற வார்த்தைகளுக்கு காமெடியா அர்த்தம் வெச்சு படத்தை நகர்த்திக்கிட்டு போறார் பாருங்க… அடடே இன்னொரு சுந்தர்.சி கோலிவுட்டுக்கு கெடைச்சாச்சு போலிருக்கேன்னு தான் சொல்லத் தோணுது.

ஓம் ஒளிப்பதிவில் நைட் எபெக்ட் காட்சிகள், கிராமத்தின் பசுமையான பேக்கிரவுண்ட், பல கோடி பெண்களிலே பாடலில் பாலைவனத்தின் அழகு ‘பளிச்’ ‘பளிச்’.

தீனா தேவராஜன் இசையில் ஒரு பொண்ணைப் பாத்தேன் மாமா…, பல கோடி பெண்களிலே, வாடி குடி லேடி என எல்லா பாடல்களும் வெரைட்டி பீட்ஸ்.

ஓப்பனிங் டைட்டில் கார்டு முடியவும் அடுத்த கால் மணி நேரத்துல சிரிக்க ஆரம்பிக்கிற ரசிகர்களை எண்டு ரோலிங் டைட்டில் ஸ்க்ரீனை விட்டு மறையிற வரை  சிரிக்க வெச்சு தான் அனுப்புறார் இயக்குனர் ஆனந்.  ஆக ‘இந்தியா பாகிஸ்தான்’ சீரியஸ் இல்ல… சிரிப்பு………

‘எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல்’ சுவாரஸ்யம் குறைவு.

ராபர்ட், சுரேஷ், மனோஜ், கும்கி ஆகிய நான்கு பேரும் நண்பர்கள். இவர்கள் ஒன்றாக குடிசைப் பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள். இதில் வங்கியில் செக்யூரிட்டி வேலை பார்க்கும் கும்கியின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. இவருக்கு ஆப்ரேஷன் செய்ய 2 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இதை தன் நண்பர்களிடம் சொல்லி பணத்தை ஏற்பாடு செய்ய முயற்சி செய்கிறார்கள்.

எங்கு கேட்டும் பணம் கிடைக்காமல் போகிறது. குறித்த நேரத்தில் அவர்களால் பணம் ஏற்பாடு செய்ய முடியாததால் கும்கியின் தாயார் இறந்து போகிறார். இதனால் மனவேதனையில் நான்கு பேரும் குடிபோதையில் கும்கி வேலை பார்க்கும் வங்கியில் இருக்கும் பணத்தை திருடி ஏழை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். அதன்படி ஏடிஎம்-ல் இருந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டம் போடுகிறார்கள்.

ஏடிஎம்-ல் உள்ள கேமராவில் தங்கள் முகம் பதிவாகாமல் இருக்க எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் ஆகியோரின் போஸ்டர்களை முகமூடி போல் அணிந்துக் கொண்டு கொள்ளையடிக்க செல்கின்றனர். ஏடிஎம் எந்திரத்தில் பணத்தை போட வரும் வங்கி அதிகாரியான நிரோஷாவை அடித்து மயங்க வைத்து பணத்தைக் கொள்ளையடித்து விட்டு நிரோஷாவையும் அழைத்து செல்கிறார்கள்.

இவர்கள் கொள்ளையடித்து வரும் வழியில் ராபர்ட்டை ஒரு தலையாக காதலித்து வரும் திருநங்கையான ராம்ஜி, இவர்களை பார்த்து விடுகிறார். அவரையும் அழைத்துக் கொண்டு ஒரு மறைவான இடத்திற்கு அனைவரும் சென்று விடுகிறார்கள். அங்கு நண்பர்கள் நான்கு பேரும் தூக்க கலகத்தில் இருக்கும் போது திருநங்கையான ராம்ஜி திருடிய பணத்தை எல்லாம் எடுத்து சென்று விடுகிறார். விழித்துப் பார்க்கும் இவர்கள் அதிர்ந்து போகிறார்கள். ராம்ஜி தான் எடுத்து வந்த பணத்தை திருப்பி தரவேண்டுமானால் ராபர்ட் என்னை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார்.

இதற்கிடையில், ஏ.டி.எம் கொள்ளை சம்பவம் போலீஸ் அதிகாரியான ஐஸ்வர்யாவிற்கு தெரிய வருகிறது. உடனே விசாரிந்து கொள்ளைக்கு காரணமான நண்பர்கள் நான்கு பேரையும் தேடி வருகிறார்.

இறுதியில் நண்பர்கள் நான்கு பேரை போலீசார் பிடித்தார்களா? திருநங்கை ராம்ஜியை ராபர்ட் திருமணம் செய்து பணத்தை மீட்டார்களா? என்பதே மீதிக்கதை.

நடன இயக்குனரான ராபர்ட் முதல் முறையாக இயக்குனராகவும் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். நடனத்தால் ரசிகர்களை கவர்ந்த இவர் நடிப்பாலும் இயக்கத்தாலும் கவர்வார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இவரது நடிப்பை ஏற்றுக் கொண்ட அளவுக்கு இவரது படத்தின் இயக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. படத்தை சுவாரஸ்யம் இல்லாமலேயே கொண்டு சென்றிருக்கிறார். இவருடைய நடனத்தால் பாடல் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்திருக்கிறார் நடிகை வனிதா. இவருடைய புது முயற்சிக்கு பெரிய பாராட்டுக்கள். ஆனால், திரைக்கதையை தெளிவில்லாமல் அமைத்திருக்கிறார். கதாபாத்திரங்கள் தேர்விலும் தோல்வியடைந்திருக்கிறார். நல்ல திறமையான கதாபாத்திரங்களை அமைத்து கூடுதல் சுவாரஸ்யத்தோடு உருவாக்கியிருந்தால் ரசித்திருக்கலாம்.

படத்தில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்கள் அனைவரும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து நல்ல நடிப்பை வாங்கியிருக்கலாம்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். ஒளிப்பதிவில் சரவணன் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் ‘எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல்’ சுவாரஸ்யம் குறைவு.

Friday, May 8, 2015

"எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல்" - விமர்சனம், - இயக்குநர் ராபர்ட்டை ஒருபோதும் ரசிகர்கள் மன்னிக்கமாட்டார்கள்!!.

பிரபுதேவா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட நடன இயக்குநர்கள் இயக்குநர் அவதாரம் எடுத்து பெரிய அளவில் ஜெயித்து விட்டதால் நாமும் டைரக்டர் கோதாவில் குதிப்போம்...என டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், அவசரகதியில் டைரக்டர் ஆகியிருக்கும் படம் தான் "எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல்" திரைப்படம்!. புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாக, ராபர்ட்டிற்கு இதெல்லாம் தேவையா...? என கேட்கவும் வைத்திருக்கிறது இப்படம்!

கதைப்படி., சதாசர்வகாலமும் குடிக்க மட்டும் காசு வைத்திருக்கும் நான்கு ஏழை இளைஞர்கள் இந்த சமூகத்தில் பணக்காரர்களுக்கு கிடைக்கும் அந்தஸ்தும், அங்கீகாரமும் பார்த்து ஒரு போதை இரவில் எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல் என 4 நடிகர்களின் முகம் பதித்த முகமூடிகளை அணிந்து கொண்டு ஒரு தனியார் வங்கியின் ஏ.டி.எம்.களை வரிசையாக கொள்ளை அடித்து ஏழைகளுக்கு மேற்படி பிரபல நடிகர்களின் பெயரிலேயே நற்பணி மன்றங்கள் அமைத்து உதவி களம் இறங்குகின்றனர். அவர்களின் திட்டம்., திட்டமிட்டபடியே நிறைவேறியதா? சட்டம் அவர்களை குற்றவாளிகளாக கூண்டில் தள்ளுகிறதா..? என்பதுதான் "எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல்" படத்தின் முக்காலும் முழுசுமான கதை! இந்த கதையை காமெடியாகவும், புதுமாதிரியாகவும் சொல்கிறேன் பேர்வழி...என ரசிகர்களை இதுவரை யாரும் கடுப்பேற்றாத அளவிற்கு கடித்து குதறிவிடுகிறார் இயக்குநர் ராபர்ட் என்பதுதான் இதில் வருத்தப்படக்கூடிய அளவிலான ஹைலைட்!.

ராபர்ட், சுரேஷ், மனோஜ், கும்கி உள்ளிட்ட நான்குபேர் நாயகர்கள், நடிக்கிறேன் பேர்வழி...என இந்த நால்வரும் பண்ணும் ராவடி பத்தாமல், கண்ணன் அலைஸ் கண்ணம்மா எனும் திருநங்கை பாத்திரத்தில் வந்து வெள்ளரிக்கா புகழ் ராம்ஜி வேறு வெறுப்பேற்றுகிறார். கையேந்திபவன் சில்க்காக வரும் சந்திரிகா - செம கிக், ஆனால் அவருக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படாதது குறை!

பிரேம்ஜி, பவர்ஸ்டார் சீனிவாசன், ஜாக்குவார் தங்கம், நிரோஷா, கணேஷ்கர், பாண்டு, ரவிகாந்த், வனிதா, நாவீத், ஐஸ்வர்யா, ஸ்பீடு செல்வம் என ஏகப்பட்டட நட்சத்திரங்கள் நடித்திருந்தும் எல்லோரது உழைப்பும் வீணடிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்ரீயின் இசையில் இரண்டு பாடல்கள் ஆறுதல்! சரவணனின் ஒளிப்பதிவு ஓ.கே!. நடிகை வனிதாவின் கதை, திரைக்கதை, வசனம் எந்தகாலத்துல இருக்கீங்க மேடம்...?! என கேட்கவைத்தாலும் ஓ.கே. எனும் அளவில் இருக்கிறது. அதை ராபர்ட் படம் முழுக்க "த்தூ,த்தூ..." என சொல்லி நடித்தபடி படமாக்கி இருக்கும் விதமும், ஆர்.ஜி.ஆனந்த் படத்தொகுப்பு செய்திருக்கும் விதமும் கொடுமை!. அடிக்கடி பின்னணியில் ஹைபிச்சில் ஒரு குரல் "எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல்" என்று காட்டுக்கத்து கத்தினால் படம் ஓடிவிடுமா.?! என்பதற்கு இயக்குநர் ராபர்ட் தான் பதில் சொல்ல வேண்டும்! சர்ச்சில் பாதிரியாராக பவர்ஸ்டார் தலைமையில் நடக்கும் ஆணுக்கும்...ஆணுக்குமான திருமணம், சரக்கு அடித்தபடி சர்ச்சின் கூரையில் நின்று தற்கொலை செய்ய முயலும் வனிதா...உள்ளிட்ட அபத்தங்களையும் தவிர்த்துவிட்டு பார்த்தாலும் "எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல்" படத்தை அவர்களது ரசிகர்களே மன்னிக்க மாட்டார்கள்!

மொத்தத்தி்ல், "எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல்" - இயக்குநர் ராபர்ட்டை ஒருபோதும் ரசிகர்கள் மன்னிக்கமாட்டார்கள்!!.

எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல் - திரை விமர்சனம்

பல படங்களுக்கு நடன இயக்குனராக இருந்து சில படங்களில் தலையை காட்டி சென்ற ராபர்ட் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமாகும் படம் தான் ”எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் ரசிகர்கள் நற்பணி மன்றம்”.

இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக உருவெடுக்கிறார் வனிதா விஜயகுமார், அது மட்டுமில்லாமல் இப்படத்தின் கதை திரைக்கதை வசனத்தையும் அவரே எழுதியிருக்கிறார். ராபர்ட், ராம்ஜி, ஐஸ்வர்யா, நிரோஷா மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

கதையை பற்றி பார்ப்பதற்கு முன்பு எப்படி இந்த படம் உருவாயிருக்கலாம் என்று பார்போம், ஒரு படம் பண்ணியாகவேண்டும் என்று யோசித்து பின் காமெடிதானே மினிமம் கேரண்ட்டி.

அதனால் அதையே எடுப்போம்ன்னு முடிவு செய்து, அதன் பிறகு த்ரில்லா கதை போகனும்னு ஹாலிவுட்டில் ஹிட் ஆன ஹேங்கோவர், ஸ்பீட் பட ஸ்டைலில் உருவாக்கியுள்ளனர் இந்த எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் படத்தை.
கதை

“மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு” என்று போட்டவுடனே, மது அருந்தும் காட்சியுடன் படம் ஆரம்பிக்கிறது. நாலு குறும்பான நண்பர்கள் அதில் ஒருவர் ஹீரோ, பணமில்லா காரணத்தில் நண்பர்களில் ஒருவரான ’கும்கி’யின் தாயார் உயிரிழக்க நேர்கிறது, அன்றிரவே நால்வரும் பணம் கொள்ளையடிக்க முடிவெடுக்கிறார்கள்.

உடனே எம்,ஜி,ஆர் சிவாஜி, ரஜினி, கமலின் முகமூடிகளை ஆளுக்கொருவர் அனிந்து எதோ ஆம்லெட் போடுவதுபோல ஒரு குறிப்பிட்ட வங்கியின் ATMல் கொள்ளை அடிக்கிறார்கள்.

கொள்ளையடித்த பணத்தையும், ATMல் பணம் நிரப்ப வந்த அதிகாரியான நிரோஷாவயும் கடத்தி கொண்டுபோகிறார்கள். அதன்பின் ”சப் வே சர்ஃபர்ஸ்” (Subway Surfers) கேமில் காயின்களை எடுப்பதுபோல போகும் வழியில் இருக்கும் அனைத்து ATMகளிலும் உள்ள பணத்தை கொள்ளை அடிக்கிறார்கள்.

இவர்களை பிடிக்க சிரிப்பு போலிஸாக ஐஸ்வர்யா வருகிறார், பின் ஐஸ்வர்யா இவர்களை கைது செய்தார்களா? பணம் என்ன ஆனது என்பதை நகைச்சுவையாக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.
நடிகர்கள், நடிகைகள் & டெக்னீஷன் பங்களிப்பு:

பெரிய இடைவேளைக்கு பிறகு நடித்தாலும் ராம்ஜி அவர் வேலையை அவர் நன்றாக செய்திருக்கிறார். முதல் பாடலான ”சங்கி மங்கி” குத்தாட்டம் போடவைக்கிறது, இரண்டாம் பாடல் ரசிக்கும் விதம். பின்னணி இசையில் கவனம் செலுத்தியிருக்கலாம்.
க்ளாப்ஸ்:

ராம்ஜியின் வித்தியாசமான நடிப்பு. சங்கி மங்கி பாடல் படமாக்கப்பட்ட விதம். படத்தின் இரண்டாம் பாதி ரசிக்க வைக்கின்றது.
பல்ப்ஸ்

ஒரு சில இடங்களில் முகம் சுழிக்க வைக்கும் வசனங்கள்,

மொத்தத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் முதல் பாதியில் தடுமாறி, இரண்டாம் பாதியில் ரசிக்க வைக்கிறது.

Tuesday, May 5, 2015

அவெஞ்சர்ஸ் – அல்ட்ரான்களின் சகாப்தம் – சினிமா விமர்சனம்

அவெஞ்சர்ஸ் குழுவிலுள்ள சூப்பர் ஹீரோவான அயன்மேன் எதிர்காலத்தில் வேற்று கிரகவாசிகளிடம் இருந்து மனித இனத்தை காப்பாற்றுவதற்காக சிந்திக்கும் திறனுடைய ரோபோ படையை உருவாக்க முயற்சிக்கிறார்.

அல்ட்ரான் எனப்படும் அந்த ரோபோ உலகின் ஒட்டுமொத்த அமைதியையும் சீர்குலைத்து வருவது மனிதம் இனம்தான் என ரோபோ கணித்து ஒட்டுமொத்த மனித இனத்தையும் அழிக்க முடிவு செய்கிறது.

அல்ட்ரானை மனிதர்களுக்கு எதிராய் திருப்பும் குழுவில் குவிக் சில்வர், ஸ்கேர்லெட் விட்ச் என இரண்டு சக்தி வாய்ந்த மனிதர்களும் இருக்கிறார்கள். இவர்களது திட்டப்படி முதலில் அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோக்களை அழித்துவிட்டால் மனிதர்களை எளிதில் பூமியிலிருந்து அப்புறப்படுத்திவிடலாம் என நினைக்கிறார்கள்.

இதனால் ஸ்கேர்லெட் விட்ச் தனது சக்தியின் மூலம் ஹல்க்கின் மூளையை தன் வசப்படுத்தி நகரத்தை அழிக்க அனுப்புகிறாள். மூர்க்க குணத்துடன் ஹல்க் தனது அசுரத் தாக்குதலை நகர மக்கள் மீது தொடுக்க, அதனை அயன்மேன் தன் கவச மனிதர்கள் மூலம் கட்டுப்படுத்துகிறார்.

இறுதியில் அல்ட்ரான் படைகளிடமிருந்து அவெஞ்சர்ஸ் எப்படி தப்பித்தார்கள்? மனித இனத்தை அல்ட்ரான்களிடமிருந்து எப்படி காப்பாற்றினார்கள்? என்பதே மீதிக்கதை.

ஒரேயொரு சூப்பர் ஹீரோ நடித்த ஹாலிவுட் படமென்றாலே அப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இந்த படத்தில் ஒட்டுமொத்த ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களும் ஒன்றிணைந்து நடித்திருப்பதால் படம் ரொம்பவும் பிரம்மாண்டமாக இருக்கின்றது. அயன்மேன், தோர், ஹல்க், கேப்டன் அமெரிக்கா, பிளாக் விடோ, ஹாக் ஐ, வார் மெஷின் என முக்கிய சூப்பர் ஹீரோக்களே அவெஞ்சர்ஸ் குழு.

இப்படத்தில் தொழில்நுட்பங்களை ரொம்பவும் திறமையாக கையாண்டுள்ளனர். அல்ட்ரான் எனப்படும் ரோபோக்கள் படை ஒரு நகரத்தை பூமியோடு பெயர்த்து எடுத்து அந்தரத்தில் தூக்கிச் செல்லும் காட்சி பிரமிப்பை ஏற்படுத்துகிறது. அதுவும் இப்படத்தை 3டியில் பார்க்கும்போது நம் கண்ணெதிரே நடப்பது அவ்வளவு துல்லியமாக இருக்கிறது.

கதை வழக்கமானதுதான் என்றாலும், நம்மால் கற்பனை செய்துகூட பார்க்கமுடியாத விஷயங்களை இந்த அவெஞ்சர்ஸ் 2-ம் பாகம் செய்திருக்கிறது. இந்த படத்தில் வெறும் ஆக்ஷன் மட்டுமில்லாமல் சின்னச் சின்ன காமெடிகளையும் சூப்பர் ஹீரோக்கள் செய்வது படத்திற்கு கூடுதல் பலம். ஸ்டேன் லீயுடன் இணைந்து எழுதிய காமிக்ஸ் புத்தகத்ததையே ‘அவஞ்சர்ஸ்’ திரைப்படமாக எடுத்திருக்கிறார் ஜாஸ் வெடோன். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்களில் இதனையும் சேர்த்துக் கொள்ளலாம்.

மொத்தத்தில் ‘அவெஞ்சர்ஸ் 2’ அற்புதம்

Sunday, May 3, 2015

வை ராஜா வை - மொத்த பணத்தையும் சூதாட்டத்தில் விட்ட கதை தான்! வேறென்ன சொல்ல..?திரை விமர்சனம்

பரபரவென ஆக்‌ஷன் காட்சிகளை கொட்டி ரசிகர்களை தன் பக்கம் திருப்புவதற்காகவே ஒரு முழுநீள சூதாட்டக்கதையை கையில் எடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா ஆர்.தனுஷ்.

பின்னாடி என்ன நடிக்கும்கிறதை முன்னாடியே தெரிஞ்சிக்கிற ஒரு அபூர்வ சக்தியை கொண்டவர் தான் ஹீரோ கெளதம் கார்த்திக்.

அது எப்படின்னா? சின்ன வயசுல ஸ்கூல்ல படிக்கிறப்போ பரீட்சையில வரக்கூடிய கேள்விகளை முன்கூட்டியே சக மாணவர்களுக்கு சொல்லி பெரும் பிரச்சனையை கெளப்புற அளவுக்கு!

இந்த அபூர்வ சக்தியால பையனுக்கு பிரச்சனைகள் வந்திடுமோன்னு சங்கடப்படும் அப்பா வஸந்த் சாய் இனிமே இந்த சக்தியை எந்த இடத்திலும் பயன்படுத்தக்கூடாது, யார்கிட்டேயும் இதைப் பத்தி சொல்லக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிக்கிறார்.

அப்பாவோட சத்தியத்தை மீறாத கெளதம் கார்த்திக் கொஞ்ச நாள் அதை சுத்தமா மறந்து நண்பன் சதீஷ் தயவால ஒரு கம்பெனியில வேலைக்கு சேர்ந்து எந்த பிரச்சனையும் இல்லாமல்
போகிறது.

கொஞ்ச நாள் தான் மீண்டும் அதே சக்தி விஸ்வரூபமெடுக்கிறது. அங்க சமயத்தில் நண்பராக அறிமுகமாகிறார் விவேக். கம்பெனியில் ஒரு பிரச்சனை வர, அதை முன் கூட்டியே தெரிந்து சரி செய்ய உதவி செய்கிறார்.

கெளதமின் இந்த அபார சக்தியை தெரிந்து கொள்ளும் விவேக் ஒரு சூதாட்டக் கும்பலிடம் கூட்டிப் போகிறார். நான் 20 லட்சம் ரூபாய் கடன்ல இருக்கேன். நீ வந்து இந்த சூதாட்டத்துல ஜெயிச்சி கொடுத்தா நான் அந்த கடன்ல இருந்து மீண்டுடுவேன் என்று சொல்ல, கெளதமுக்கும் அக்கா கல்யாணத்துக்காக 20 லட்சம் தேவைப்பட 40 லட்சத்தை தாண்டி 1 கோடியை சுளையாக ஜெயித்து விடுகிறார்.

1 கோடியை விட்டுக் கொடுத்த வில்லன் கோஷ்டி சும்மா இருக்குமா என்ன? மீண்டும் விளையாட கெளதமை கூப்பிடுகிறார்கள். கெளதமோ இனிமேல் நான் விளையாடப்போவதில்லை என்று மறுக்கிறார்.

அதன்பிறகு நடப்பது என்ன என்பதை நீங்கள் ஓரளவுக்கு யூகித்து விடலாம் என்றாலும் சின்ன சின்ன ட்விஸ்ட்டுகளை வைத்து ரெண்டு மணி நேரத்தில் படத்தை முடிக்கிறார்கள்.

அப்பா கார்த்திக்கின் துறுதுறுப்பும், அழகும் அப்படியே ஒட்டிக் கொண்டிருந்தும் நடிப்பில் மட்டும் இன்னும் கொஞ்சம் தேற வேண்டும் போல இருக்கிறார் கெளதம் கார்த்திக். நல்ல உசரத்தோடு இருப்பவர் ஒரு ஆக்‌ஷன் படமென்றால் ஆக்ரோஷம் காட்ட வேண்டாமா? அது டோட்டலா மிஸ்ஸிங். எப்பவும் எதையோ பரிகொடுத்தவர் மாதிரி ஒரு முகபாவனை.

கெளதம் கார்த்திக் – ப்ரியா ஆனந்த் காதல் காட்சிகளில் எந்த பீலிங்க்ஸும் வரவில்லை. ’3′ படத்தில் காதலை உருக உருக சொன்ன ஐஸ்வர்யாவா இப்படி மொக்கையான காதல் காட்சிகளை யோசிப்பார்?

வில்லனாக வரும் டேனியல் பாலாஜி அச்சு அசல் வில்லனாகவே இருக்கிறார். படத்தில் அதிகபட்ச கை தட்டல்களை பெறும் ஒருசில கேரக்டர்களில் அவரும் ஒருவர்.

முதல் பாதி, காதல், கலகலப்பு, காமெடி என்று காட்சிகளை நகர்த்தியிருக்கும் ஐஸ்வர்யா சதீஷின் காமெடி காட்சிகளுக்குப் பதில் விவேக்கின் காமெடிக் காட்சிகளை அதிகமாக்கியிருக்கலாம்.

காமெடி என்ற பெயரில் சதீஷ் பேசும் மொக்கையான டயலாக்குகளுக்கெல்லாம் சிரிப்பு வருவேனா என்கிறது? நல்லவேளையாக அவ்வப்போது பஞ்ச் காமெடி டயலாக்குகளில் கலகலப்பூட்டி நம்மை ‘ரிலாக்ஸ்’ ஆக வைக்கிறார் விவேக்.

கிளைமாக்ஸில் சில நிமிடங்களே வந்தாலும் ரசிகர்களின் நான் – ஸ்டாப் கைதட்டல்கள் தனுஷுக்குத் தான். வேஷ்டி – சட்டையில் கெத்தோ கெத்து.

யுவனின் இசையில் அவரே பாடிய பாடல் என்றால் ஒன்ஸ்மோர் ரகமாகத்தான் இருக்கும். இதிலும் ‘பச்சை வண்ணப்பூவே…” பாடல் முதல் தடவை கேட்ட மாத்திரத்திலேயே காதுகளை ரீப்பிட்டட் பாடலாகிறது.

வேல்ராஜின் ஒளிப்பதிவில் சூதாட்டக் கிளப்பு மட்டுமல்ல, ஹெஸ்ட் ரோலில் வரும் டாப்ஸியும் 1000 வாட்ஸ் பல்பு போல ஜொலிக்கிறார். தேங்க்ஸ் வேல்ராஜ் சார்!

ஒரே ஒரு கானாபாட்டுக்கு எஸ்.ஜே.சூர்யா குத்தாட்டம் போட்டு விட்டுப் போகிறார்.

தமிழ்சினிமாவில் பெண் இயக்குனர்கள் மீது வைக்கப்படும் வழக்கமான ‘குடும்பப் பார்வை’யை மாற்றி பப்,நைட்பார்ட்டி, சூதாட்டம், போதை மயக்கம் என ரூட்டை மாற்றியிருக்கிறார் இயக்குனர் ஐஸ்வர்யா ஆர்.தனுஷ்.

’3′ யில் சீனுக்கு சீன் ஐஸ்வர்யாவின் அதிக மெனக்கிடலை திரையில் பார்க்க முடிந்தது.  இப்படத்திலோ எங்கே ஆரம்பித்து எங்கே முடிப்பது என்கிற பெருங்குழப்பத்தில் எந்த விறுவிறுப்பும் இல்லாமல், டேனியல் பாலாஜி மாதிரியான பெரிய வில்லன் கேரக்டரை கூட கிளைமாக்ஸில் டம்மியாக்கி தனது கணவர் தனுஷை வைத்து ஒப்பேற்றியிருக்கிறார்.

ஆக மொத்த பணத்தையும் சூதாட்டத்தில் விட்ட கதை தான்! வேறென்ன சொல்ல..?

கப்பார் இஸ் பேக் (ஹிந்தி) - விமர்சனம்....ரமணா அளவிற்கு இல்லை..!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜயகாந்த் நடிப்பில் 2002ம் ஆண்டு வௌியான சூப்பர் படமான ரமணா, இந்தியில், அக்ஷ்ய் குமார் நடிப்பில், கப்பார் இஸ் பேக் என்ற பெயரில் ரீ-மேக்காகி, ஆக்ஷ்ன் படமாக வௌியாகி இருக்கிறது. கப்பார் இஸ் பேக் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்தது என்று இனி பார்ப்போம்...

கதைப்படி கல்லூரி பேராசிரியர் கப்பார் எனும் அக்ஷ்ய் குமார். மாணவர்களுக்கு படிப்பை சொல்லி கொடுத்து வந்தாலும், மற்றொருபுறம் நாட்டில் ஊழல் செய்யும் அதிகாரிகளையும் களையெடுக்க களம் இறங்குகிறார். அதன்படி ஒவ்வொரு துறையிலும் அதிகமாக ஊழல் செய்த 10 அதிகாரிகளில், மிக அதிகம் ஊழல் செய்த ஒருவரை தண்டித்து(கொலை செய்து) அதிகாரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்துகிறார்.

அதிகாரிகள் தவிர்த்து தொழிலதிபர்களும் இதில் சிக்குகிறார்கள். அதில் அதிக ஊழல் செய்த தொழிலதிபரான திக்விஜய் பாட்டிலும் (சுமன் தல்வார்) மாட்டுகிறார். இவர் தான் சில ஆண்டுளுக்கு முன்னர் அக்ஷய் குமாரின் மனைவி மற்றும் அவர் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் இடிய காரணமானவர். இதுஒருபுறம் இருக்க அதிகாரிகளின் கொலைக்கு காரணமானவர்களை தேட களமிறங்குகிறார் கான்ஸ்டெபிள் சுனில் மற்றும் சிபிஐ., அதிகாரிகள். சிபிஐ., அக்ஷ்ய் கப்பாரை கைது செய்ததது, தொழிலதிபர் திக்விஜய் என்ன ஆனார் என்பது தான் கப்பார் படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை!

அக்ஷ்ய் குமார் அவ்வளவு அற்புதமாக நடித்திருக்கிறார். கல்லூரி பேராசிரியராகவும் சரி, ஊழல் அதிகாரிகளை களையெடுக்கும் ஹீரோவாகவும் ஜொலித்திருக்கிறார். வக்கீலாக வரும் ஸ்ருதியின் நடிப்பும் ஓ.கே., கான்ஸ்டபிளாக வரும் சுனில், தொலதிபராக வரும் வில்லன் சுமன், கெஸ்ட் ரோலில் வந்து போகும் கரீனா கபூர், ஒரே ஒரு பாட்டுக்கு வந்து குத்தாட்டம் போட்டுவிட்டு போகும் சித்ராங்கடா ஆகியோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கேரக்டரில் அசத்தியுள்ளனர்.

படத்தின் பாடல்கள், ஔிப்பதிவு எல்லாம் ஓ.கே., தென்னிந்திய சினிமாக்களில் பிரபலமாக இருக்கும் இயக்குநர் கிரிஷ்க்கு, இந்தியில் இதுதான் முதல்படம். கப்பார் படத்தின் கதை மிக மிக அருமையானது. ஆனால் அதை பாலிவுட் ரசிகர்களுக்கு ஏற்றபடி படத்தை கொடுக்க சற்று தவறிவிட்டார் இயக்குநர். படத்தின் ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கிறது, ஆனாலும் பின்னர் ஒவ்வொரு காட்சிகளும் விறுவிறுப்பாக செல்கிறது. குறிப்பாக படத்தின் வசனங்கள் அனல் பறக்கின்றன. அக்ஷ்ய் நடிப்பு, அனல் பறக்கு வசனங்கள் மற்றும் சண்டைக்காட்சிகள் படத்திற்கு பெரிய ப்ளஸாக அமைந்துள்ளது.

க்ளைமாக்ஸ் காட்சிகள் ரசிகர்களுக்கு லேசான ஏமாற்றத்தை தந்தாலும், அக்ஷ்ய் குமாரின் நடிப்புக்காகவும், அற்புதமான கதைக்காகவும் ''கப்பார் இஸ் பேக்'' படத்தை எல்லோரும் பார்க்கலாம்.

Saturday, May 2, 2015

உத்தம வில்லன் - படம் எப்படி? விமர்சனம்

ஒரு நடிகன், அவனுடைய வாழ்க்கை... இதுதான் ‘உத்தம வில்லன்’!

பிரபல நடிகராக கமல், அவருடைய மாமனார் மற்றும் தயாரிப்பாளராக கே.விஸ்வநாத். கமலின் குருவாக கே.பி. அவரைச் சுற்றி நடக்கும் பிரச்னைகள், அவருக்கு வரும் மிகப்பெரிய ஆபத்து. அது என்ன ஆபத்து, அவர் மீண்டாரா, இல்லையா என்பதுதான் மீதி கதை.

நடிகனாக கமல். தனது சொந்த வாழ்வின் பெரும்பாலான தருணங்கள் என்பதால் நடிக்க சொல்லிக் கொடுக்கவா வேண்டும்? அவருக்கு குருவாக கே.பாலசந்தர் வரும் காட்சிகளில் எல்லாம் நம்மையும் மீறிய சோகம்தான் நெஞ்சில் நிறைகிறது.

மற்றவர்கள் அவரவர் பாத்திரங்களைச் சரியாக செய்துள்ளனர். எனினும், நாசர் வரும் காட்சிகள் பல இடங்களில் சிரிப்பைவிட முகச்சுழிப்பையே அதிகம் உண்டாக்குகிறது. அதை சரிசெய்திருக்கலாம். பூஜா குமார் வரும் காட்சிகளும் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்கோ என்றே தோன்றுகிறது.

படம் முழுக்க கமலும் பாலசந்தருமே தெரிகின்றனர். 'ஆமாம். ரமேஷ் அரவிந்த் தானே படத்தின் இயக்குநர்' என அவ்வப்போது மனம் கேட்பதை நிறுத்த முடியவில்லை. பூர்வ ஜென்மம், நிகழ்காலம் என ஏதேதோ கதை நினைத்து சென்றால் நீங்கள் அவுட். இது வேற மாதிரி அல்ல வழக்கம் போலான கதை. படம் பல இடங்களில் தொங்கி நிற்கிறது. முக்கியமாக முதல் பாதி தேமே எனச் செல்வதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.இரணிய நாடகத்தில் நரசிம்மரையே சாய்ப்பதுபோல் காட்சியமைப்பை மாற்றியமைத்த விதம்தான் நெருடல்.

'சிங்கிள் கிஸ்கே லவ்வா', 'காதலாம்' பாடல்கள் அழகு, இரணிய நாடகம் கமல் ரசிகர்களுக்கு ஸ்பெஷல். பின்னணி, சோகக் காட்சிகளில் அழுத்தம். எனினும், அரசர் கால பகுதியில் ஒரே பிரமாண்ட அறிவிப்பைத் தாண்டி பெரிய பின்னணி இசை ஏதும் இல்லை.

கைதேர்ந்த கலைஞன், கலைஞனாகவே நடிக்கும்போது இன்னும் எத்தனை பெரிய ஆச்சர்யங்கள் படத்தில் இருந்திருக்க வேண்டும்? எப்போதும் போல் கமல் கமலாக நடிக்கிறார் என்பதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது?

சரி, பார்க்கலாமா? குருவான கே.பாலசந்தர், சிஷ்யனான கமல் இருவரையும் ஒருசேர நாம் நேரில் பார்த்தது மிகக் குறைவு. இனியும் வாய்ப்புகள் இல்லை. அதைக் அதிகம் காண வேண்டும் எனில், படம் பார்க்கலாம்!

உத்தம வில்லன் - விமர்சனம் - ஜீவன் வழியும் கதை இது

சுருக்கமாக சொன்னால் ‘ஒரு நடிகனின் கதை!’

புகழ் வெளிச்சத்தில் புழங்கும் ஒரு ஹீரோவின் அந்தரங்கம், எவ்வளவு புழுக்கமானது என்பதுதான் முழுக்கதை! மதுரை தமிழ், சென்னை தமிழ், கோவை தமிழ் என்பதை போல ‘கமல் தமிழ்’ என்ற ஒன்றும் இருப்பதால், அதே தமிழில் ஆரம்பிக்கிறார் படத்தை. அதற்கப்புறம் டச் பை டச் கமல் டச்! நடு நடுவே ‘பச்சக் பச்சக்’ என்று அவர் மேயும் ஸ்பாட்டுகள் இதற்கு முன் வந்த கமல் படங்களுக்கு சற்றும் குறைந்ததல்ல! எல்லாவற்றையும் தாண்டி இந்த படத்தின் சென்ட்டிமென்ட்டுக்கு யாரும் தப்ப முடியாது. கல் நெஞ்சர்களுக்கு இரு சொட்டு கண்ணீரும், இளகிய நெஞ்சர்களுக்கு அது இன்னும் பெருகி ஆறாகி வழிவதும் நடக்கிறது.

தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் மார்கதரிசியிடமே (கே.பாலசந்தர்) மறு கருத்து கொள்கிற அளவுக்கு வியாபார உலகம் மனோரஞ்சன் (கமல்) என்கிற ஹீரோவை வளைத்து வைத்திருக்கிறது. தொடர்ந்து கமர்ஷியல் படங்களிலேயே நடித்து உச்சாணிக் கொம்பில் இருக்கும் கமலின் படங்களை அவரது மாமனார் பூரணசந்திர ராவே (கே.விஸ்வநாத்) தயாரிக்கிறார். ஒருகட்டத்தில் தனது குடும்பத்தினர் யாருக்கும் சொல்லாமல் தனது குருநாதர் பாலசந்தரை நாடும் கமல், ‘எனக்காக என்னை வச்சு ஒரு படம் எடுங்க’ என்கிறார். ‘கதை வேணுமேடா…’ என்று ஒதுங்கும் அவருக்கு இவரே ஒரு கதையை சொல்ல, சாகாவரம் பெற்ற ஒருவனின் கதையை படமாக்குகிறார்கள் இருவரும். அவர்கள் எடுக்கும் படத்தில் சாகாத வரம் பெறும் கமல், நிஜத்தில் செத்து செத்து பிழைக்கிறார் ஒவ்வொரு நாளும். அவருக்கு வந்த பிரெய்ன் ட்யூமர் வியாதி குணமானதா? அவரிடம் கோபம் கொண்ட குடும்பத்தின் ரீயாக்ஷன் என்ன? இதெல்லாம்தான் முழு நீள ‘உத்தம வில்லன்!’

‘வில்லன்ங்கறது இங்கிலீஷ் பெயர். இதுக்கு எப்படி வரிவிலக்கு கிடைக்கும்?’ என்று கதாநாயகியை விட்டே கேள்வி கேட்க வைக்கும் அவர், ‘வில்லன் என்பது சுத்தமான தமிழ் பெயர் ’ என்று விளக்கம் கொடுப்பதில் ஆரம்பிக்கிறது கமலின் வசனக் குசும்பு. ‘ஏன் ஒரு கூத்தாடி நாடாளக் கூடாதா?’ என்பது வரைக்கும் கூட அது நீள்வதெல்லாம் கமல் என்ற தனி மனிதனின் கருத்து சுதந்திரம்.

சுற்றி சுற்றி பால் வடியும் ஒரு ரப்பர் மரத்தை, ராஜஸ்தான் ஊர்க்காரன் ஒருவன் எப்படி சுற்றி சுற்றி நின்று ரசிப்பானோ? அப்படி ரசிக்க வேண்டியிருக்கிறது கமலின் நடிப்பை. பதினாறு வருஷமாக பார்க்காத தன் மகளின் படத்தை செல்போனில் மாறி மாறி காட்டும்போது கவனிக்கும் அவரது கண்களும், உதடும், கன்னங்களும் பேசுகிற கதையை இப்போது வருகிற எந்த நடிகனின் முகத்திலும் காணவே முடியாது. ‘அப்பா சாகப்போறேண்டா…’ என்று விஷயத்தை படீரென போட்டு உடைக்காமல், டீன் ஏஜ் மகனிடம் பந்து விளையாடிக் கொண்டே விவரிக்கும் அந்த காட்சியில் நீர் முட்டுகிறது விழிகளில். மரணப்படுக்கையில் முகத்தில் ‘மாஸ்க்’ வைக்கிற நேரத்திலும் கூட, அதற்குள்ளிருந்து டாக்டருக்கு முத்தம் கொடுக்கும் கமல், தனது மேனரிசத்தை விடவே விடாததுதான் ‘ஹை!’

அதேநேரம், எட்டாம் நூற்றாண்டில் வரும் கமல் சற்று படுத்தவே செய்கிறார். அந்த காட்சிகளில் கணிசமாக கை வைத்தால் கூட தப்பில்லைதான்! தெய்யம் கலையை அந்த கலைஞர்களே வியக்கும் அளவுக்கு ஸ்டெப் வைக்கும் கமலின் அர்ப்பணிப்புக்கு ஒரு அன்பு வணக்கம்.

கமலுக்கு பின் கவர்கிற இடத்திலிருக்கிறார் மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர். தனது சிஷ்யனுக்கு கேன்சர். அவனது நாட்கள் எண்ணப்படுகிறது என்பதை அறிந்தவுடன், அதுவரை காட்டிய அத்தனை கோபத்தையும் அப்படியே மூட்டை கட்டி வீசிவிட்டு, தன் சீட்டில் அவரை அமர வைத்து ஆறுதல் படுவதை வெறும் படமாக பார்க்க முடியவில்லை. இவரைப்போலவே தள்ளாத வயதிலும் உட்கார்ந்த இடத்திலேயே ஸ்கோர் பண்ணும் கே.விஸ்வநாத், அசத்தல்!

மருத்துவராக வரும் ஆன்ட்ரியா, அந்த மெச்சுரிட்டியை விட்டுக் கொடுக்காமலும், அதே நேரத்தில் கமலுக்கு தன்னையே விட்டுக் கொடுத்தும் வாழ்கிற அந்த நிமிஷங்கள் ஆன்ட்ரியா மீது அன்பு செலுத்தவே வைக்கிறது. ‘இங்கு இருக்கிற மூன்று ஆம்பளைகளும் இந்த விஷயத்தை வெளியில் சொல்லக் கூடாது’ என்று கூறிவிட்டு கமலை இறுக அணைத்துக் கொள்கிற போது, காமம் மீறி, கருணையே வழிகிறது அங்கு.

கோபக்கார மனைவி ஊர்வசி, கணவனுக்கு கேன்சர் என்றதும் புலம்புவதும், அழுவதுமாக கண்ணீரும் கம்பலையுமாக சிரிக்க வைக்கிறார். ஒரு சில காட்சிகள் மட்டுமே வந்தாலும், பார்வதி மேனன், கமலையே தூக்கி சாப்பிடுகிறார் நடிப்பில். இந்த போர்ஷனை இன்னும் கொஞ்சம் நீடித்திருக்கலாமோ என்று எண்ண வைக்கிறது அவரது அழகு!

இன்னும் எத்தனை படங்களுக்கு பூஜா குமாரோ? கமல் சார்… போரடிக்குது! கண்ணாடிய மாத்துங்க. இல்லேன்னா கலரை மாத்துங்க!!

‘27 வருஷமா உங்க காலடியிலேயே கெடக்குறேன். இந்த விஷயத்தை எனக்கு கூட சொல்லலியே…’ என்று கண்ணீர் சிந்தும் எம்.எஸ்.பாஸ்கர், சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார். சில இடங்களில் அழவும் வைக்கிறார். இவரை பொறுத்தவரை இந்த படத்தின் பொறுத்தமான ஸ்டார் காஸ்டிங்!

நாசர், சண்முகராஜன், திருஞானசம்பந்தன் என்று 8 ம் நூற்றாண்டு நபர்களாக இவர்கள். (சுமாராக கழுவி வைத்த வேப்பெண்ணை பாட்டில்கள்?!)

படத்தில் கொட்டிய அத்தனை கோடிகளையும் அலுங்காமல் குலுங்காமல் உள்வாங்கி பிரமாண்டம் காட்டுகிறது ஷாம்தத்தின் ஒளிப்பதிவு. ஜிப்பரானின் இசையில் காதலாம், கடவுள் முன் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பு.

சினிமாவிற்குள் சினிமாவை சொன்ன படங்கள் ஏராளமாக இருந்தாலும், ஜீவன் வழியும் கதை இது. கைக்குட்டையோடு செல்லுங்கள். வெறும் கண்ணீரை மட்டுமல்ல, ஆனந்த கண்ணீரையும் சேர்த்து துடைத்த மாதிரியிருக்கும்!

வை ராஜா வை.. ஜாலியான சம்மர் ரைடு!

பொதுவாகவே பெண் இயக்குநர்கள் படம் என்றால் அதில் பொழுதுபோக்கு அம்சங்கள், தொழில்நுட்ப நேர்த்தி அவ்வளவாக சோபிக்காமல் போய்விடும். குறிப்பாக ஒருவித பெண்மைத் தனமே மேலோங்கி இருக்கும்.

ஆனால் முதல் முறையாக இவற்றைக் கடந்து, ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போடும் அளவுக்கு ஒரு தரமான பொழுதுபோக்குப் படத்தைத் தந்திருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். அதற்காக முதலிலேயே அவரைப் பாராட்டிவிடுவோம்.

கதை தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே புதிய கதைக் களம். காஸினோ எனப்படும் சூதாட்ட உலக நிகழ்வுகளை பரபரப்பான பொழுதுபோக்காக்கித் தந்திருக்கிறார் ஐஸ்வர்யா.


மிடில் க்ளாஸ் பையனான கவுதமுக்கு இயற்கையாகவே எதையும் முன் கணித்துச் சொல்லும் ஒரு அமானுஷ்ய சக்தி இருக்கிறது. சிறுவயதில் அதனால் அவன் நிறைய பிரச்சினைகளைச் சந்திக்கிறான். எனவே அப்படி ஒரு சக்தி இருப்பதை மறநந்துவிடுமாறு பெற்றோர் கெஞ்ச, மெல்ல மெல்ல அந்த சக்தியை மறக்கிறான்.

தன் நண்பன் உதவியுடன் ஒரு செல்போன் நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை ஊழியராகிறார். தன் சைக்கிள் மீது மோதும் தாவரப் பிரியையான ப்ரியா ஆனந்தை, முதல் சந்திப்பிலேயே காதலிக்கிறார். இரு வீட்டிலும் அந்தக் காதல் ஓகே ஆகிவிடுகிறது. வேலை, நண்பன், காதலி என்று நிம்மதி வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் சூழலில் மீண்டும் அந்த சக்தி அவருக்குள் தலைதூக்குகிறது.

அலுவலகத்தில் கவுதமும் வேலைப் பார்க்கும் விவேக்குக்கு இவனது சக்தி தெரிந்துவிட, அதை வைத்து கிரிக்கெட் சூதாட்டத்தில் ஒரு முறை ஈடுபடுகிறார்கள். அந்த மேட்சின் ஒவ்வொரு ஓவரிலும் என்ன நடக்கும் சரியாக கவுதம் முன் கணித்துச் சொல்ல, அதன் படியே நடந்து ஒரு கோடி சம்பாதிக்கிறார்கள்.

பெட்டிங்கில் பணத்தை இழந்த டேனியல் பாலாஜி கொலை வெறியாகிறார். ஜெயித்த பணத்தில் ஜாலியாக கோவா செல்லும் கவுதம் அன்ட் கோவை விரட்டிப் பிடித்து, துப்பாக்கி முனையில் மிரட்டி, மீண்டும் தனக்காக ஒரு சொகுசு கப்பலில் நடக்கும் காசினோவில் சூதாட வைக்கிறார் டேனியல். அங்கு சூதாடி பணத்தை வென்றாலும் ஆபத்து, தோற்றாலும் ஆபத்து... அதிலிருந்து கவுதம் அன்ட் கோ எப்படி தப்பிக்கிறார்கள், டேனியல் பாலாஜி - கவுதம் பகை எப்படித் தீர்க்கிறது என்பது மீதிக் கதை.

சுவாரஸ்யமான கதை.. அதை இன்னும் சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஐஸ்வர்யா. கமர்ஷியல் வெற்றி தந்த முதல் பெண் இயக்குநர் என கம்பீரமாகச் சொல்லிக் கொள்ளலாம்.

மிக இயல்பாக ஆரம்பிக்கும் காட்சிகள், எப்போது விறுவிறுப்பாக மாறியதென்றே தெரியாத அளவுக்கு வேகமெடுக்கின்றன.

அதுவும் அந்த கிரிக்கெட் சூதாட்டம் நடக்கும் விதம், அதில் புழங்கும் பணம், சொகுசு கப்பல் காஸினோ காட்சிகளெல்லாம் ரசிகர்களுக்கு ரொம்பவே புது அனுபவம். அந்தக் காட்சிகளுக்கு யுவன் அமைத்திருக்கும் பின்னணி இசை படத்தை இன்னும் விறுவிறுப்பாக்குகிறது.

கவுதமுக்கு முதல் வெற்றிப்படமாக அமைந்துள்ளது வை ராஜா வை. ஆனால் நடிப்பில் இன்னும் அவர் பல படிகள் ஏற வேண்டியிருப்பதை பல காட்சிகளில் பார்க்க முடிகிறது.

ப்ரியா ஆனந்த், டாப்சி இருவரும் தங்கள் பொறுப்பை சரியாகச் செய்திருக்கிறார்கள். இடைவேளைக்குப் பின் வரும் டாப்சி, அந்த காசினோ பற்றி க்ளாஸ் எடுக்கும் விதம் டாப்.

விவேக் இந்தப் படத்தில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். அவரது ஒன் லைனர்கள், பஞ்ச் வசனங்கள் அத்தனையிலும் மகா நவீனம். மனிதர் என்னமாய் அப்டேட் ஆகியிருக்கிறார். இந்த பாணியை தொடருங்கள் விவேக். இந்தப் படம் இத்தனை லைவாக அமைய விவேக் முக்கிய காரணம்.

அடுத்து டேனியல் பாலாஜி. வில்லத்தனத்தில் புதுப் பரிமாணம் காட்டியிருக்கிறார். திருமண வீட்டில் கவுதமை காப்ரா பண்ணும் அவரது ஸ்டைல் செம!

க்ளைமாக்ஸில் கொக்கி குமாராக வரும் தனுஷை பிரமாதமாகப் பயன்படுத்தியிருக்கிறார் ஐஸ்வர்யா.

படத்தின் இன்னொரு சிறப்பு இரண்டே கால் மணி நேரத்துக்குள் முடிந்துவிடுவது.

சின்னச் சின்ன குறைகள் இருந்தாலும் படத்தை ரசிக்க அவை தடையாக இல்லை.

வேல்ராஜின் ஒளிப்பதிவும், யுவன் சங்கர் ராஜாவின் இசையும் இயக்குநருக்கு பக்கபலங்கள்.

வை ராஜா வை.. ஜாலியான சம்மர் ரைடு!

Friday, May 1, 2015

வை ராஜா வை விமர்சனம் – அவரை காமெடி பீசும் ஆக்கியிருக்கிறார்கள்

3 படத்தை இயக்கி திறமை காட்டிய ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 2வது படம் வை ராஜா வை. மே தினத்தில் வெளியாகியிருக்கும் வை ராஜா வை ஆட்டம் எப்படி இருக்கிறது…?

அடுத்து நடக்கக் போவதை முன்பே தெரிந்து கொள்ளும் அசாதாரணமான ஒரு திறன் கார்த்திக் (கவுதம் கார்த்திக்)க்கு இருக்கிறது. இந்த திறன் குறித்து அவனது சிறு வயதிலேயே தெரிந்து கொள்ளும் கார்த்திக்கின் அப்பா, அதை எந்த ஒரு நேரத்திலும் பயன்படுத்தக் கூடாது என்று சத்தியம் வாங்கிவிடுகிறார். படித்து விட்டு வேலை தேடும் கார்த்திக்குக்கு அவனது நண்பன் சதீஷ் (சதீஷ்) மூலமாக அவன் வேலை பார்க்கும் நிறுவனத்திலேயே வேலையும் கிடைக்கிறது. தான் வேலை பார்க்கும் நிறுவனத்தை நிறுவன கணக்கு விஷயத்தில் தன் திறனை பயன்படுத்தி பிரச்சினையில் இருந்து தப்ப வைக்கிறார் கார்த்திக். இந்த சம்பவத்தினால் இவருடன் வேலை பார்க்கும் பான்டா (விவேக்)க்கு கார்த்திக்கிடம் இருக்கும் தனித் திறன் பற்றி தெரிந்துவிடுகிறது. கிரிக்கெட் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தவிக்கும் பான்டா கார்த்திக்கை பயன்படுத்தி தான் இழந்த பணத்தை மீட்க நினைக்கிறார். கார்த்திக்கிடம் பேசி தனக்காக சூதாட்டத்தில் கலந்து கொள்ள வைக்கிறார். சூதாட்டத்தில் விளையாடி ஏகப்பட்ட பணம் ஜெயிக்கிறார்கள். இனிமேல் சூதாட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என்று முடிவு எடுக்கும் கார்த்திக்கை சூதாட்டத்தை நடத்தும் பாலாஜி மீண்டும் சூதாட்டத்தில் கலந்து கொள்ள வற்புறுத்துகிறார். இல்லையென்றால் கார்த்திக்கின் காதலியையும் குடும்பத்தையும் போட்டுத் தள்ளிவிடுவேன் என்று சொல்லி மிரட்டும் பாலாஜிக்காக சூதாட்டத்தில் கார்த்திக் கலந்து கொண்டானா? பாலாஜி பிடியில் இருந்து தப்பித்தானா? என்பது மீதி கதையும்… தொடர்வது போன்று முடியும் முடிவும்…
vai-raja-rajaபாடல் காட்சியுடன் துவங்குகிறது படம். அடுத்து கார்த்திக் யார்… எப்படிப்பட்டவன் என்கிற காட்சிகள் கவுதம் கார்த்திக்கின் குரலுடன் வந்து விழுகின்றன. படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக நருகிறது. இரண்டாவது பாதியில் டேனியல் பாலாஜி கவுதம் கார்த்திக்கை மிரட்டி கப்பலில் சென்று சூதாட்டத்தில் கலந்து கொள்ள வைப்பது போன்ற காட்சிகள், அதுவும் கொஞ்சம் சீரியஸ் கலந்தவை. ஆனால் இந்த காட்சிகளில் விறுவிறுப்பு பஞ்சமாகியிருக்கிறது.

அப்பாவி இளைஞன், ஆக்க்ஷன் ஹீரோ கேரக்டருக்கு கவுதம் கார்த்திக் ஓரவுக்கு செட் ஆகியிருக்கிறார். கதாநாயகியாக ப்ரியா ஆனந்த். முதல் பாதியில் ஆங்காங்கே வந்து முகம் காட்டி பாடலுக்கும் ஆடுகிறார். இரண்டாவது பாதியில் அம்மணியை தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. வண்டியில் வந்து இரண்டு பேரை இடித்துத் தள்ளிவிட்டு அவர்கள் ஒரு செடி மீது விழுந்து விட விழுந்து விட்டவர்களைக் கை தூக்கி விடாமல் செடியைப் பார்த்து உச் கொட்டி தடவி விடுவது கொஞ்சம் டூமச்சான காட்சிதான். கவுதம் கார்த்திக்கு அக்காவாக நடித்திருக்கிறார் காயத்ரி ரகுராம். ஆன்டி மாதிரி இருக்கும் அவருக்கு கல்யாணம் நடக்கிறது. இது முதல் கல்யாணமா? அல்லது இரண்டாவது கல்யாணமா என்னும் சந்தேகம்தான் ரசிகர்களுக்கு. இயக்குநர் அதை நிவர்த்தி செய்யுற மாதிரி ஏதாவது காட்சி வைத்திருக்கலாம். அக்காவின் கல்யாண செலவுகளுக்காக அப்பாவுக்கு செய்து கொடுத்திருந்த சத்தியத்தையே மீறுகிறார் கவுதம் கார்த்திக். அதற்கு வலுவான காட்சிகளை ஏதும் வைக்காமல் விட்டிருக்கிறார் இயக்குநர். அப்பாவாக வசந்த், அம்மாவாக ஸ்ரீரஞ்சனி டெம்ப்ளேட் அப்பா அம்மா. நண்பனாக வருகிறார் சதீஷ். படத்தின் ராஜா விவேக்ன்னு கூட சொல்லலாம். முதல் பாதியில் கலகலக்க வைக்கிறார். பான்டா கேரக்டரில் வரும் இவர் பேசும் வசனங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. விவேக் வரும் பெரும்பாலான காட்சிகளில் சிரிக்க முடிகிறது. சாலையில் போடப்பட்டிருக்கும் வேகத்தடைகள், கோவாவில் குடிக்கும் போது மது நாட்டுக்கு உயிருக்கு கேடு என்று அட்டையில் எழுதி வைத்து கொள்வது என சில இடங்களில் சமூக நலன் கலந்து இவர் பேசும் வசனங்களுக்கு திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு. எம்எஸ் பாஸ்கர், மனோபாலா கேரக்டர்களும் ‘உள்ளேன் ஐயா’ சொல்லிப் போகிறார்கள். வில்லனாக வரும் டேனியல் பாலாஜி டெரர் முகம் காட்டுவதாக ஆரம்பித்தாலும் அவரை அறியாமலேயே அவரை காமெடி பீசும் ஆக்கியிருக்கிறார்கள். குறிப்பாக திருமண மண்டபத்தில் கார்த்திக்கின் அப்பா, அம்மா என அனைவரது பின்னாலும் டேனியல் பாலாஜியின் ஆள்கள் நிற்பதும்… அப்போது அவர் அலைபேசியில் பேசும் வசனங்களும்.

ஒரே ஒரு பாடலுக்கு வந்து ஆட்டோக்காரனாக ஆட்டம் போடுகிறார் எஸ்ஜெ சூர்யா. இவருக்கு தன்கிட்ட இருக்கும் திறமை இவருக்கே தெரியாது போலிருக்கு. நல்ல படங்கள் குடுப்பாரு என்று எல்லாரும் இவரை எதிர்நோக்கியிருக்க மனுஷன் இந்தப் படத்தில ஒரு பாடலுக்கு இடுப்பை வளைச்சு குத்தாட்டம் போட்டுட்டுப் போறாரு. இறுதிக் காட்சிகளில் கொக்கி குமாரு கேரக்டரில் என்ட்ரி கொடுத்திருக்கிறார் தனுஷ். ஆடுகளம் படத்தில் நடிச்சா பொண்ணா அது…? ஸ்ரேயா (டாப்ஸி) கேரக்டரில் நடிச்சிருக்கு… இன்னும் ரெண்டு படத்தில் இது மாதிரி கேரக்டரில் நடிச்சா அதற்கு அடுத்த படங்களில் அம்மணியை நிச்சயம் அக்கா அண்ணி கேரக்டரில் நடிச்ச வெச்சிருவாங்க…

யுவன் ஷங்கர் ராஜா இசை. கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த படத்தில் இடம் பெற்ற முட்டாளாய் முட்டாளாய் பாடலின் இடையில் வரும் இசையையே இந்தப் படத்திலும் சில இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார். தனுஷ் என்ட்ரி கொடுக்கும் காட்சியில் புதுப்பேட்டை தீம் மியூசிக்கை ஓட விட்டு சைலன்ட் செய்திருக்கிறார்.  அதற்கு பேசாமல் அந்த தீம் மியூசிக்கையே முழுதாக ஓடவிட்டிருக்கலாம். பாடல்கள் பெரிதாக கவரவில்லை. பின்னணி இசை மட்டும் கொஞ்சம் தப்பிப் பிழைத்திருக்கிறது.

காட்சிகளோடு இணைந்து தலையசைத்திருக்கும் ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் ஓகே ரகம். படத்தை இயக்கியிருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். 3 படத்தில் பாருக்குள் வைத்து தாலி கட்டும் காட்சிகளை படத்தில் வைத்து கலாச்சார சாதனை படைத்த ஐஸ்வர்யா இந்தப் படத்திலும் அது போன்ற காட்சிகளை வைக்க தவறவில்லை. கதாநாயகி பிரியா ஆனந்த் குடித்துவிட்டு தள்ளாடியபடியே பப்பில் இருந்து வெளியே வருவது போன்ற காட்சியை வைத்திருக்கிறார். படத்தின் முதல் பாதியை கலகலப்பாக சுவாரஸ்யமாக நகர்த்தியவர் இரண்டாவது பாதி சீரியஸ் கதை என்பதாலோ என்னவோ சற்றே திணறியிருக்கிறார். படத்தின் கதையை தனுஷ் உடன் இணைந்து கவுதம் கார்த்திக் நடிக்கப் போவது போன்று முடித்திருக்கிறார்கள். ஒருவேளை ஐஸ்வர்யா தனுஷ் அடுத்து தனுஷ் கவுதம் கார்த்திக்கை வைத்து அடுத்த படத்தை இயக்குவார் என்பது மட்டும் தெரிகிறது.

வை ராஜா வை - விமர்சனம்

வை ராஜா வை விமர்சனம் – அவரை காமெடி பீசும் ஆக்கியிருக்கிறார்கள்

3 படத்தை இயக்கி திறமை காட்டிய ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 2வது படம் வை ராஜா வை. மே தினத்தில் வெளியாகியிருக்கும் வை ராஜா வை ஆட்டம் எப்படி இருக்கிறது…?

அடுத்து நடக்கக் போவதை முன்பே தெரிந்து கொள்ளும் அசாதாரணமான ஒரு திறன் கார்த்திக் (கவுதம் கார்த்திக்)க்கு இருக்கிறது. இந்த திறன் குறித்து அவனது சிறு வயதிலேயே தெரிந்து கொள்ளும் கார்த்திக்கின் அப்பா, அதை எந்த ஒரு நேரத்திலும் பயன்படுத்தக் கூடாது என்று சத்தியம் வாங்கிவிடுகிறார். படித்து விட்டு வேலை தேடும் கார்த்திக்குக்கு அவனது நண்பன் சதீஷ் (சதீஷ்) மூலமாக அவன் வேலை பார்க்கும் நிறுவனத்திலேயே வேலையும் கிடைக்கிறது. தான் வேலை பார்க்கும் நிறுவனத்தை நிறுவன கணக்கு விஷயத்தில் தன் திறனை பயன்படுத்தி பிரச்சினையில் இருந்து தப்ப வைக்கிறார் கார்த்திக். இந்த சம்பவத்தினால் இவருடன் வேலை பார்க்கும் பான்டா (விவேக்)க்கு கார்த்திக்கிடம் இருக்கும் தனித் திறன் பற்றி தெரிந்துவிடுகிறது. கிரிக்கெட் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தவிக்கும் பான்டா கார்த்திக்கை பயன்படுத்தி தான் இழந்த பணத்தை மீட்க நினைக்கிறார். கார்த்திக்கிடம் பேசி தனக்காக சூதாட்டத்தில் கலந்து கொள்ள வைக்கிறார். சூதாட்டத்தில் விளையாடி ஏகப்பட்ட பணம் ஜெயிக்கிறார்கள். இனிமேல் சூதாட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என்று முடிவு எடுக்கும் கார்த்திக்கை சூதாட்டத்தை நடத்தும் பாலாஜி மீண்டும் சூதாட்டத்தில் கலந்து கொள்ள வற்புறுத்துகிறார். இல்லையென்றால் கார்த்திக்கின் காதலியையும் குடும்பத்தையும் போட்டுத் தள்ளிவிடுவேன் என்று சொல்லி மிரட்டும் பாலாஜிக்காக சூதாட்டத்தில் கார்த்திக் கலந்து கொண்டானா? பாலாஜி பிடியில் இருந்து தப்பித்தானா? என்பது மீதி கதையும்… தொடர்வது போன்று முடியும் முடிவும்…

‘உத்தமவில்லன்’ - திரை விமர்சனம்...!

கமலஹாசன் ஒரு மிகப்பெரிய நடிகர். இவர் தனது மனைவி ஊர்வசி, மகன் மற்றும் மாமனார் விஸ்வநாத்துடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். கமலுக்கும் அவரது குடும்ப டாக்டரான ஆண்ட்ரியாவுக்கும் நெருக்கமான உறவு இருந்து வருகிறது.

இந்நிலையில், கமல் நடித்து முடித்த ஒரு படத்துக்கு படக்குழுவினர் ஒரு பெரிய ஓட்டலில் பார்ட்டி நடத்துகின்றனர். இதில் கமலின் குடும்பத்தினர் கலந்துகொள்கின்றனர். அப்போது, அந்த பார்ட்டிக்கு வரும் ஜெயராம், கமலை தனியாக சந்தித்து அவருக்கு ஒரு பெண் இருப்பதாகவும், இதுபற்றி விவரம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் தன்னை தொடர்புகொள்ளுமாறும் கூறிவிட்டு அவரிடம் தன்னுடைய விசிட்டிங் கார்டை கொடுத்துவிட்டு செல்கிறார்.

அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்கும் கமலஹாசன், தனது மேனேஜரிடம் கூறி இதுகுறித்து விசாரிக்க சொல்கிறார். ஆனால், இதற்குள் கமலுக்கு அந்த ரகசியத்தை தெரிந்துகொள்வதற்கான ஆர்வம் அதிகமாகவே, ஜெயராமை தேடிச் சென்று சந்திக்கிறார்.

அப்போது, கமல் கல்யாணத்துக்கு முன்பே ஒரு பெண்ணிடம் நெருக்கமாக பழகியதையும், அந்த பெண் கர்ப்பமுற்று, அந்த பெண்ணின் கருவை கலைக்க இவரது மாமாவான விஸ்வநாத் பணம் கொடுத்ததையும், அந்த பெண் அதை வாங்க மறுத்து, அந்த கருவுடனேயே கமலை விட்டு பிரிந்து சென்றதையும், அந்த பெண்ணை தான் திருமணம் செய்துகொண்டதையும் அவரிடம் விளக்கிக் கூறுகிறார்.

அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தைதான் மாளவிகா மேனன். அவள் தற்போது கல்லூரியில் படித்து வருவதாக கமலிடம் கூறும் ஜெயராம், ‘அவள் உங்களை ஒரு வில்லனாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்’ என்கிறார். தன் தவறை உணர்ந்த கமல், அவளை பார்க்கத் துடிக்கிறார்.

இந்நிலையில், கமலுக்கு ஆரம்பத்திலிருந்தே இருக்கும் தலைவலி தற்போது அதிகமாகிறது. ஸ்கேன் செய்து பார்க்கும்போது, கமலின் தலையில் ஒரு கட்டி இருப்பதாகவும், நீண்ட நாளைக்கு உயிரோடு இருக்கமாட்டார் என்றும் டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் மனவேதனையடையும் கமல், தான் ஒரு நடிகர் என்பதால், தான் இறப்பதற்குள் தன்னுடைய ரசிகர்களுக்கு ஒரு நல்ல, நகைச்சுவை கலந்த படத்தை கொடுத்தே ஆகவேண்டும் என்று தீர்மானிக்கிறார்.

இதற்காக தனது குருநாதர் கே.பாலச்சந்தரிடம் சென்று ‘உங்களையும் என்னையும் இந்த மக்கள் மறக்க முடியாத அளவுக்கு ஒரு படத்தை இயக்க வேண்டும்’ என்று கேட்கிறார். ஏற்கெனவே, கமல் மீதும், அவரது மாமனார் விஸ்வநாத் மீதும் மனஸ்தாபத்தில் இருக்கும் கே.பாலச்சந்தர் இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்.

தன்னுடைய கதையை கேட்டுவிட்டு பின்னர் உங்கள் முடிவை தெரிவிக்குமாறு கமல் கூற, அவரும் வேண்டா விருப்பாக கதையை கேட்கத் தொடங்குகிறார். இறுதியில், அந்த கதை கமலுடைய நிஜவாழ்வில் நடந்த கதை என்பது தெரிந்ததும் கமலை வைத்து ‘உத்தமவில்லன்’ என்ற படத்தை இயக்க ஒப்புக் கொள்கிறார்.

கமல்-கே.பாலச்சந்தர் மீண்டும் இணைந்தது கமலுடைய குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்துகிறது. கமலுக்கும் அவரது மாமனாருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதில், கமல் தன் மாமனாரை கோபத்தில் திட்ட, இதனால் கமலுடைய மனைவி தனது மகன் மற்றும் அப்பாவுடன் அந்த வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

இருப்பினும், தன்னுடைய லட்சியத்தில் விடாப்பிடியாக இருக்கும் கமல், இதையெல்லாம் தாங்கிக் கொண்டு படத்தில் நடிக்க ஆரம்பிக்கிறார். இறுதியில், கமல் அந்த படத்தை திட்டமிட்டபடி முடித்தாரா? பிரிந்துபோன இவர் குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்ததா? என்பதே மீதிக்கதை.

Tuesday, April 28, 2015

அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015) திரை விமர்சனம்…

படத்தின் கதைப்படி, அல்ட்ரான் உருவானதற்கு ஒரு வகையில் ‘அயன் மேன்’ டோனி ஸ்டார்க்கே காரணம். வேற்றுகிரகவாசிகளிடமிருந்து இந்த உலகத்தைக் காப்பதற்காக அவர் உருவாக்கிய ரோபோக்களான அல்ட்ரான் மனிதர்களுக்கு எதிராய் திரும்புவதே இப்படத்தின் கதை. பூமியின் அழிவுக்குக் காரணமாக இருப்பது மனித இனமே என நினைக்கும் அல்ட்ரான், மனிதர்களை பூமியில் இருந்து அப்புறப்படுத்த முயற்சிக்கிறது. அல்ட்ரானின் இந்த விபரீத முயற்சியை அவெஞ்சர்ஸ் ஹீரோக்கள் எப்படி முறியடிக்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதைக்களம்.

தமிழ்ப்படத்திற்குக்கூட இதற்கு முன்பு இவ்வளவு வரவேற்பு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. அந்தளவுக்கு காட்சிக்கு காட்சி தியேட்டரில் ரசிகர்கள் கூச்சலிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
அல்ட்ரானை மனிதர்களுக்கு எதிராய் திருப்பும் குழுவில் குவிக் சில்வர் (ஆரோன் டெய்லர்), ஸ்கேர்லெட் விட்ச் (எலிசபெத் ஒல்சென்) என இரண்டு சிறப்பு சக்தி வாய்ந்த மனிதர்களும் இருக்கிறார்கள். இவர்களது திட்டப்படி முதலில் அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோக்களை அழித்துவிட்டால் மனிதர்களை எளிதில் பூமியிலிருந்து அப்புறப்படுத்திவிடலாம் என நினைக்கிறார்கள். இதனால் ஸ்கேர்லெட் விட்ச் தனது சக்தியின் மூலம் ஹல்க்கின் மூளையை தன் வசப்படுத்தி சிட்டியை அழிக்க அனுப்புகிறாள். மூர்க்க குணத்துடன் ஹல்க் தனது அசுரத் தாக்குதலை நகர மக்கள் மீது தொடுக்க, அதனை அயன்மேன் தன் கவச மனிதர்கள் மூலம் கட்டுப்படுத்தும் காட்சியில் தியேட்டரே அதிர்கிறது.

இத்தனை சூப்பர் ஹீரோக்களை வைத்துக் கொண்டு ஒரு படத்தை எடுக்க வேண்டுமானால் ஒவ்வொருவருக்கும் சமமான காட்சிகளை எப்படி திரையில் கொண்டுவர வேண்டும் என்பதற்கு இப்படம் சரியான உதாரணம். படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே இந்த சூப்பர் ஹீரோக்கள் இணைந்து எதிரிகளைப் பந்தாடும்போதே உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. வெறும் ஆக்ஷன் மட்டுமில்லாமல் சின்னச்சின்ன காமெடிகளையும் சூப்பர் ஹீரோக்கள் செய்வது படத்திற்கு கூடுதல் பலம். தொழில்நுட்ப ரீதியில் ஹாலிவுட் படங்கள் எத்தனை உயரத்திலிருக்கின்றன என்பதை இப்படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். ஒரு சிட்டியையே பூமியோடு பெயர்த்தெடுத்து அந்தரத்தில் அல்டரான் ரோபோக்கள் தூக்கிச் செல்லும் காட்சி ரசிகர்களை சீட் நுனிக்கு வரவைக்கிறது. அதுவும் 3டியில் பார்க்கும்போது, ஒவ்வொரு காட்சியும் நம் கண்ணெதிரே நடப்பதுபோல் அவ்வளவு துல்லியம்.

மொத்தத்தில் ‘அவெஞ்சர்ஸ் 2 : ஏஜ் ஆஃப் அல்ட்ரான்’ பிரம்மாண்டம்………